/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காப்பு காடுகளில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
/
காப்பு காடுகளில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
காப்பு காடுகளில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
காப்பு காடுகளில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
ADDED : மே 14, 2024 06:41 AM

மறைமலை நகர்: சிங்கபெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் சாலை 9 கி.மீ., நீளம் உடையது. இந்த சாலை, திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலை.
இந்த சாலையை பயன்படுத்தி, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, தங்களின் அடிப்படை தேவைகளுக்காக சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், கொண்டமங்கலம், தென்மேல்பாக்கம், தர்காஸ், சிறுங்குன்றம் உள்ளிட்ட கிராமங்களின் சாலையோரம், இருபுறமும் காப்பு காடுகள் உள்ளன.
இந்த காப்பு காடுகள் மற்றும் சாலையோரம் தொடர்ந்து பிளாஸ்டிக் குப்பை, மது பாட்டில்கள், டியூப் லைட்டுகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
குப்பை காற்றில் பறப்பதாலும், இந்த குப்பையை பன்றிகள் கிளறுவதால் ஏற்படும் துர்நாற்றம் காரணமாக, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
கொட்டப்பட்டுள்ள கழிவு பொருள்களை கீரி, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் உட்கொள்வதால், அவற்றிற்கு பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, வனப்பகுதியில் குப்பை கொட்டும் மர்ம நபர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

