/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அறிவியல் கண்காட்சி: அசத்திய மாணவர்கள்
/
அறிவியல் கண்காட்சி: அசத்திய மாணவர்கள்
ADDED : மார் 01, 2025 11:36 PM

திருப்போரூர், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, திருப்போரூர் அடுத்த தண்டலம் குருதேவா மழலையர் மற்றும் தொடக்க பள்ளியில், அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது.
பள்ளி தாளாளர் உதயா ஆதிமூலம் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக, திருப்போரூர் லயன்ஸ் கிளப் தலைவர் மணி, ஓய்வு பெற்ற துணை பி.டி.ஓ., ராதாகிருஷ்ணன், சமூக ஆர்வலர் குமரவேல் ஆகியோர் பங்கேற்று, அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து பேசினர்.
மாணவ, மாணவியர் பங்கேற்று, கண்காட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடிநீர் சுத்திகரிப்பு, சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்தல், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை வைத்திருந்தனர். பார்வையாளர்களுக்கு அதன் செயல் விளக்கங்களையும் மாணவர்கள் எடுத்துக் கூறினர்.
கண்காட்சிக்கான ஏற்பாடுகளை, பள்ளி தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
அறிவியல் கண்காட்சியில் தங்களது படைப்புகளை விளக்கி அசத்திய மாணவியர்.