/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுாரில் கழிவுநீர் தேக்கம் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
/
வண்டலுாரில் கழிவுநீர் தேக்கம் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
வண்டலுாரில் கழிவுநீர் தேக்கம் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
வண்டலுாரில் கழிவுநீர் தேக்கம் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
ADDED : செப் 09, 2024 06:30 AM

கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சி 11வது வார்டுக்கு உட்பட்ட ஓட்டேரி விரிவு பகுதியில் உள்ள வால்மீகி தெரு, செல்வ விநாயகர் கோவில் தெரு, மாணிக்க ஜலகண்ட தெரு ஆகிய பகுதிகளில், புதிதாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
அவற்றில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சீராக செல்லாமல் தேங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, அதில் குப்பை சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேக்கம் அடைந்துள்ளது.
இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் கொசுத்தொல்லை, துர்நாற்றம் அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இப்பகுதியில் சில நாட்களில் மூன்று பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால், இப்பகுதிவாசிகள் தேங்கியுள்ள கழிவு நீரால், மேலும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக அச்சத்தில் உள்ளனர்.
எனவே, தேங்கிய கழிவு நீர் மற்றும் குப்பையை அகற்றி, கழிவு நீர் தேங்காமல் சீராக செல்வதற்கு வழிவகை செய்ய, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.