/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சார் - பதிவாளர் அலுவலகத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
/
சார் - பதிவாளர் அலுவலகத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
சார் - பதிவாளர் அலுவலகத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
சார் - பதிவாளர் அலுவலகத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஆக 22, 2024 12:34 AM

மறைமலை நகர்:செங்கல்பட்டில், காஞ்சிபுரம் செல்லும் சாலையில், தனியார் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு சார் - பதிவாளர் அலுவலகம், மாவட்ட சிறைச்சாலை உள்ளிட்டவை உள்ளன. அதோடு, நுாற்றுக்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள் உள்ளன.
இங்கு வரும் பொது மக்கள், தங்களின் இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவற்றை, செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையின் இருபுறமும் நிறுத்துவதால், வாகன ஓட்டிகள் ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலை, செங்கல்பட்டு நகரத்திற்கு வரும் நுழைவுப்பகுதியாக உள்ளது. இதில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.
பது பணிக்காக அங்கு வரும் பொது மக்கள், தங்களின் வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால், அம்புலன்ஸ், அரசு பேருந்து, பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை சென்று வர சிரமமாக உள்ளது.
நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் உள்ளதால், பாதசாரிகள் ஆபத்தான நிலையில் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில், சார் - பதிவாளர் அலுவலகம் வரும் வாகனங்களுக்கு, மாற்று இடத்தில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.