/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : பிப் 23, 2025 07:52 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பழங்குடியினர் இளைஞர்கள் தேர்வு செய்யும் பணி, நாளை நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள, பழங்குடியினர் இளைஞர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு வழங்க உள்ளது.
இதற்காக, செங்கல்பட்டு மாவட்டத்தை மையமாகக் கொண்டு, திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பழங்குடியினர் இளைஞர்களை தேர்வு செய்யும் பணி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக, மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில், வரும் 25ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.
மேற்கண்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டதாரிகள் கல்வி தகுதியும், 18 வயது முதல் 33 வயதுடையவர்கள், ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ், புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

