/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரேஷன் கார்டில் திருத்தம் மெய்யூரில் சிறப்பு முகாம்
/
ரேஷன் கார்டில் திருத்தம் மெய்யூரில் சிறப்பு முகாம்
ரேஷன் கார்டில் திருத்தம் மெய்யூரில் சிறப்பு முகாம்
ரேஷன் கார்டில் திருத்தம் மெய்யூரில் சிறப்பு முகாம்
ADDED : மார் 08, 2025 11:40 PM
மதுராந்தகம், மதுராந்தகம் ஒன்றியம், மெய்யூர் ஊராட்சியில் நேற்று, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாம் நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்தல், புதிய அட்டை பதிவு செய்தல், முகவரி மாற்றம், புகைப்படம் பதிவேற்றம் போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அதில் நேற்று, மதுராந்தகம் தாலுகாவில், மெய்யூர் ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் நடந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாமில், ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், அட்டை புதுப்பித்தல், புகைப்படம் பதிவேற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட 49 மனுக்கள் பெறப்பட்டன.
இதை, மதுராந்தகம் வட்ட வழங்கல் அலுவலர் மகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன் துவக்கி வைத்தனர்.
வருவாய்த்துறை, வட்ட வழங்கல் துறை ஊழியர்கள் பணிகளை மேற்கொண்டனர்.
மெய்யூர், சிதண்டி, பிலாப்பூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்தனர்.