/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாநில மகளிர் ஹாக்கி போட்டி: சென்னை வெற்றி
/
மாநில மகளிர் ஹாக்கி போட்டி: சென்னை வெற்றி
ADDED : பிப் 26, 2025 12:05 AM

சென்னை, ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில், 'அஸ்மிதா' என்ற தலைப்பில், மாநில அளவில் மகளிருக்கான ஜூனியர் ஹாக்கி போட்டிகள், எழும்பூர், ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடக்கின்றன.
இதில், சென்னை, கடலுார், மதுரை உட்பட எட்டு மாவட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று காலை நடந்த, 'லீக்' போட்டியில், சென்னை மற்றும் சேலம் அணிகள் மோதின.
அதில், சென்னை அணி, 3 - 0 என்ற கணக்கில் சேலத்தை வீழ்த்தியது. வீராங்கனையர் ஜோதி, லட்சுமி 7 மற்றும் 21வது நிமிடங்களில் தலா ஒரு கோலும், பவித்ரா 46வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்து வெற்றிக்கு கைக்கொடுத்தனர்.
மற்றொரு போட்டியில், மதுரை மற்றும் கடலுார் அணிகள் மோதின. அனல்பறந்த இந்த ஆட்டம், 'டிரா'வில் முடிந்தது. போட்டிகள், 27ம் தேதி வரை நடக்கின்றன.