/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குப்பை அள்ளும் வாகனம் சீரமைக்க நடவடிக்கை
/
குப்பை அள்ளும் வாகனம் சீரமைக்க நடவடிக்கை
ADDED : பிப் 24, 2025 11:25 PM
திருப்போரூர், திருப்போரூர் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில், 30,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தினமும் பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் வாயிலாக குப்பை சேகரிக்கப்படுகிறது.
இந்நிலையில் குப்பை தொட்டியில் உள்ள குப்பையை அள்ளும் தானியங்கி குப்பை அள்ளும் வாகனம், உரிய பராமரிப்பு இல்லாததால், அதன் இரண்டு 'டயர்' பஞ்சர் ஆனது.
இவற்றை பேரூராட்சி நிர்வாகம் துரிதமாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல், கடந்த 5 நாட்களாக குப்பையுடன் பைபாஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக வாகனத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.