/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லையில் உலவும் தெருநாய்கள் பொது மக்கள் பீதியில் தவிப்பு
/
மாமல்லையில் உலவும் தெருநாய்கள் பொது மக்கள் பீதியில் தவிப்பு
மாமல்லையில் உலவும் தெருநாய்கள் பொது மக்கள் பீதியில் தவிப்பு
மாமல்லையில் உலவும் தெருநாய்கள் பொது மக்கள் பீதியில் தவிப்பு
ADDED : மார் 02, 2025 11:24 PM

மாமல்லபுரம்மாமல்லபுரம் சிற்ப வளாகங்களில், தெருநாய்கள் உலவி, சுற்றுலா பயணியரை அச்சுறுத்துவதால், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
மாமல்லபுரத்தில், தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. பிரதான சாலைகள், வசிப்பிட பகுதிகள் ஆகிய இடங்களில், பகலிலும், இரவிலும் நாய்கள் கூட்டமாக உலவுகின்றன.
இவை பாதசாரிகள், இருசக்கர வாகன பயணியரை விரட்டுகின்றன. ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு மோதிக் கொள்கின்றன. தற்போது, கடற்கரை கோவில் வெளிப்புற புல்வெளி பகுதி, அர்ஜுனன் தபசு. வெண்ணெய் உருண்டை பாறை, வராக குடவரை மண்டபம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட சிற்ப பகுதிகளில், நாய்கள் கும்பலாக குவிந்து, சுற்றுலா பயணியரை அச்சுறுத்தி விரட்டுவதால், பயணியர் பீதியில் சென்று வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்து தெருக்கள், சிற்ப பகுதிகளில் உலவும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.