/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போதை பொருள் தராத நண்பரை தாக்கிய மாணவர்கள்
/
போதை பொருள் தராத நண்பரை தாக்கிய மாணவர்கள்
ADDED : மார் 08, 2025 11:23 PM

கூடுவாஞ்சேரி,ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அனீஸ், 19. பொத்தேரியில் உள்ள தனியார் கல்லுாரியில் பொறியியல் படிக்கும் இவர், சக மாணவர்களிடம் பணம் பெற்று, போதைப் பொருள் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அனீஸ் படிக்கும் அதே கல்லுாரியில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், 19, ஆந்திராவைச் சேர்ந்த சாய்தேஜா, 20, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சைதன்யா, 19, ஆகியோரும் படிக்கின்றனர்.
இந்நிலையில் சதீஷ்குமார், சாய்தேஜா, சைதன்யா ஆகிய மூன்று மாணவர்களும், அனீஸ் வசம் தலா 2,000 ரூபாய் கொடுத்து, போதைப் பொருள் வாங்கித் தரும்படி கூறி உள்ளனர். ஆனால், அவர்களுக்கு அனீஸ் போதைப் பொருளை தரவில்லை. ஆத்திரமடைந்த மூன்று மாணவர்களும், கடந்த 3ம் தேதி இரவு, தைலாவரத்தில் உள்ள அவர்களது அறைக்கு வரும்படி அழைக்க, அனீஸ் அங்கு சென்றுள்ளார். அப்போது, மூன்று மாணவர்களும் அனீஸை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அனீஸை மீட்டு விசாரித்தனர். அனீஸ் அளித்த புகாரின்படி சதீஷ்குமார், சாய்தேஜா, சைதன்யா ஆகிய மூவரையும், நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.