/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எப்.எம்.எஸ்.சி.ஐ., தேசிய பைக் ரேசில் ஆதிக்கம் செலுத்திய சுஹைல் அகமது
/
எப்.எம்.எஸ்.சி.ஐ., தேசிய பைக் ரேசில் ஆதிக்கம் செலுத்திய சுஹைல் அகமது
எப்.எம்.எஸ்.சி.ஐ., தேசிய பைக் ரேசில் ஆதிக்கம் செலுத்திய சுஹைல் அகமது
எப்.எம்.எஸ்.சி.ஐ., தேசிய பைக் ரேசில் ஆதிக்கம் செலுத்திய சுஹைல் அகமது
ADDED : ஜூன் 03, 2024 05:05 AM

சென்னை, : 'எப்.எம்.எஸ்.சி.ஐ., தேசிய ரேலி ஸ்பிண்ட் சாம்பியன்ஷிப்' பைக் ரேஸ் முதல் சுற்று போட்டி, சென்னை மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நேற்று நடந்தது.
அதில், குரூப் ஏ - 550 சிசி பிரிவு போட்டியில், 8:36:870 நிமிடங்களில் கடந்து, சுஹைல் அகமது முதலிடம் பிடித்தார்.
அவரைத் தொடர்ந்து, கவுஸ்துபா, 8:47:723 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தையும், ரெஹானா 9:37:111 நிமிடங்களில் கடந்து மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
அதேபோல், 550 சி.சி., புல்லட் பிரிவில், 8:52:268 நிமிடங்களில் கடந்த சுஹைல் அகமது முதலிடத்தையும், 9:07:269 நிமிடங்களில் கடந்த முகமது ஜாஹீர் இரண்டாம் இடத்தையும், 9:28:480 நிமிடங்களில் கடந்த சுஹாஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
மேலும், 550 சி.சி., ஓபன் பிரிவில், 8:32:642 கடந்து சுஹைல் அகமது முதலிடம் பிடித்தார். அவரைத் தொடர்ந்து, 8:43:627 நிமிடங்களில் கவுஸ்துபாவும், 8:59:141 நிமிடங்களில் ஹேமந்த் கவுடாவும், முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.
மூன்று பிரிவிலும், முதலிடம் பிடித்த சுஹைல் அகமது, பெங்களூரு அணியை முன்னிலைப்படுத்தினார்.
தமிழகத்துக்கான ஸ்பிரின்ட் ஸ்டார், 260 சி.சி., பிரிவில், கோவை சர்வணகுமார் 9:27:785 நிமிடத்திலும், தங்கராஜ் 9:37:116 நிமிடத்திலும் கடந்து, முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். அதேபோல், 131 சி.சி., 165 சி.சி., பிரிவுகளில், குடகு வீரர் ராய் முதலிடம் பிடித்தார்.
தொடர்ந்து, 260 சி.சி., 261 சி.சி., - 450 சி.சி., பிரிவுகளுக்கான போட்டிகளும் நடந்தன. இந்த தென்மண்டல தொடருக்கான அடுத்தச்சுற்று, அடுத்த மாதம் 20, 21ம் தேதிகளில் பெங்களூருவில் நடக்க உள்ளது.