/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டாஸ்மாக் கடையால் போக்குவரத்துக்கு கடும் இடையூறு
/
டாஸ்மாக் கடையால் போக்குவரத்துக்கு கடும் இடையூறு
ADDED : ஏப் 28, 2024 01:56 AM
திருப்போரூர்,:திருப்போரூர் அடுத்த கொட்டமேடு கிராமத்தில், சாலையை ஒட்டி டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடைக்கு வருவோர், கொட்டமேடு - கூடுவாஞ்சேரி சாலையில் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, மது வாங்க கடைக்கு செல்கின்றனர்.
இதனால், சாலையின் அளவு குறைந்து பேருந்து, வேன், லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
அதேபோல், டாஸ்மாக் கடையை மையப்படுத்தி செயல்பட்டு வரும் சில கடைகள் போன்றவற்றாலும், இச்சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, இரவு நேரத்தில் அதிகளவில் விபத்துகள் நடக்கின்றன. சாலையில் நடந்து செல்லும் பெண்கள், டாஸ்மாக் கடையை கடந்து செல்லும்போது ஒருவித அச்சத்துடனேயே செல்கின்றனர்.
எனவே, டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

