/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை மறியல் போராட்டம் செங்கையில் ஆசிரியர்கள் கைது
/
சாலை மறியல் போராட்டம் செங்கையில் ஆசிரியர்கள் கைது
ADDED : ஜூலை 04, 2024 12:49 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த வேண்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரி யர்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில்,ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், பதவி உயர்வு தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு முடியும் வரை, இடம் மாறுதல்களை நிறுத்தி வைக்க வேண்டும்.
தமிழக அரசால் வெளி யிடப்பட்டுள்ள அரசாணை 243ஐ, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போல, நிறுத்தி வைக்க வேண்டும் உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை, அரசு பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்திற்கு, சீனிவாசன் தலைமையேற்று நடத்தினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் 200க்கும் மேற்பட்டோர், திடீரென செங்கல்பட்டு -- மதுராந்தகம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்த செங்கல்பட்டு நகரபோலீசார், அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து,பின் விடுவித்தனர்.