/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கஞ்சா விற்பதில் முன்விரோதம் வாலிபருக்கு கத்திக்குத்து
/
கஞ்சா விற்பதில் முன்விரோதம் வாலிபருக்கு கத்திக்குத்து
கஞ்சா விற்பதில் முன்விரோதம் வாலிபருக்கு கத்திக்குத்து
கஞ்சா விற்பதில் முன்விரோதம் வாலிபருக்கு கத்திக்குத்து
ADDED : ஜூலை 17, 2024 01:02 AM
திருப்போரூர், கேளம்பாக்கம் அடுத்த செம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா, 24. தனியார் உணவுப் பொருள் சப்ளை செய்யும்நிறுவனத்தில் வேலை செய்கிறார்.
ஜல்லடியன்பேட்டையைச் சேர்ந்தவர் தினேஷ், 24. இருவருக்கும் இடையே, கஞ்சா விற்பனை தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, சூர்யா உணவுப்பொருள் சப்ளை செய்வதற்காக, ஏகாட்டூர் சென்றார்.
அப்போது, சரவணன் என்பவர் மூன்று கஞ்சா பொட்டலங்களை கொடுத்து, தினேஷ்வந்தால் கொடுத்துவிடு என கூறியுள்ளார்.
கஞ்சா பொட்டலங்களை வாங்கிய சூர்யா, ஏகாட்டூரில் தினேஷுக்காக காத்திருந்தார்.
அப்போது, பைக்கில் தினேஷ் உட்பட மூன்று பேர் சூரியாவை நோக்கி வந்தனர்.
அப்போது, ஏற்கனவே சூர்யாவுக்கு தினேஷுடன் முன்விரோதம் இருந்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
உடனே, தினேஷ் தரப்பினர், மறைத்து வைத்திருந்த கத்தியால், சூர்யாவின் தலை, வலது கையில் வெட்டி விட்டு தப்பினர்.
அருகே இருந்தவர்கள், காயமடைந்த சூர்யாவை ஆம்புலன்ஸ் வாயிலாக திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, கேளம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தினேஷ் மற்றும் இருவரை தேடி வருகின்றனர்.