/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பா.ம.க., கொடி கம்பத்தை அறுத்து அகற்றியதால் பதற்றம்
/
பா.ம.க., கொடி கம்பத்தை அறுத்து அகற்றியதால் பதற்றம்
பா.ம.க., கொடி கம்பத்தை அறுத்து அகற்றியதால் பதற்றம்
பா.ம.க., கொடி கம்பத்தை அறுத்து அகற்றியதால் பதற்றம்
ADDED : ஜூலை 31, 2024 04:39 AM

குன்றத்துார் : குன்றத்துாரில் பா.ம.க., கொடி கம்பத்தை, மர்ம நபர்கள் அறுத்து எடுத்துச் சென்றதால், நேற்று பதற்றம் ஏற்பட்டது.
குன்றத்துார் அருகே கொல்லச்சேரி நான்கு சாலை சந்திப்பில், நேற்று முன்தினம் பா.ம.க., சார்பில், புதிய கொடி கம்பம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த புதிய கொடி கம்பத்தை, மர்ம நபர்கள் அறுத்து எடுத்துச் சென்றுள்ளனர்.
நேற்று காலை இந்த தகவலறிந்த பா.ம.க.,வினர், ஆர்ப்பாட்டம் செய்ய அங்கு திரண்டனர்.
இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்துார் போலீசார், பா.ம.க.,வினரை சமாதனம் செய்தனர். இதையடுத்து, அறுக்கப்பட்ட கொடி கம்பத்திற்குமாற்றாக புதிய கொடிகம்பத்தை, பா.ம.க.,வினர் அதே பகுதியில் அமைத்தனர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து, கொடி கம்பத்தை அறுத்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.