/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாலிபரை அடித்து கொன்று மூட்டை கட்டி வீசிய கொடூரம்
/
வாலிபரை அடித்து கொன்று மூட்டை கட்டி வீசிய கொடூரம்
ADDED : மார் 05, 2025 11:50 PM

கொருக்குப்பேட்டை,கொருக்குப்பேட்டை, இளைய முதலி தெரு, பி.பி.சி.எல்., மதில்சுவர் நடைமேடை அருகே, ரத்த கறையுடன், சாக்குமூட்டையில் இருந்து கடும் துர்நாற்றம் வந்தது. அப்பகுதியினர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை போலீசார் வந்து மூட்டையைபிரித்தனர். அதில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம், காயங்களுடன் இருந்தது. தவிர, சடலத்தின் வாயில், துணிவைத்து அடைக்கப்பட்டிருந்தது. மேலும், சடலம் வைக்கப்பட்ட மூட்டைக்கு மேல், 'ரப்பீஸ்' மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து, உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குஅனுப்பினர்.
கொருக்குப்பேட்டை போலீசார், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். போலீசார் கூறுகையில், 'சடலமாக மீட்கப்பட்டவர் குறித்து விசாரித்து வருகிறோம். அவரை அடித்து கொலை செய்துள்ளனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம்' என்றனர்.