/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குண்டும், குழியுமாக மாறிய நெடுங்குன்றம் சாலைகள்
/
குண்டும், குழியுமாக மாறிய நெடுங்குன்றம் சாலைகள்
ADDED : செப் 12, 2024 08:35 PM
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சி, 13வது வார்டுக்கு உட்பட்ட திருவள்ளுவர் தெரு, அம்பேத்கர் தெரு மற்றும் பெரியார் தெரு உள்ளிட்ட தெரு சாலைகள் குண்டும் குழியுமாகவும், மேடும் பள்ளமாகவும் போக்குவரத்திற்கு லாயக்கற்ற முறையில் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
நெடுங்குன்றம் ஊராட்சி, 13வது வார்டுக்கு உட்பட்ட சாலைகள் 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போது, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, பயன்படுத்த முடியாத அவல நிலையில் உள்ளது.
சேதமான சாலையை சீரமைத்து கோரி, ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, சேதமான சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.