/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பேருந்தில் இருந்து தவறி விழுந்த நடத்துனர் பலி
/
பேருந்தில் இருந்து தவறி விழுந்த நடத்துனர் பலி
ADDED : மே 06, 2024 12:05 AM
பூந்தமல்லி : வந்தவாசியைச் சேர்ந்தவர் முருகன், 50; தனியார் பேருந்து நடத்துனர். இவர், பூந்தமல்லியில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில், நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார். அப்பேருந்தில் சகாதேவன், 49, என்பவர் ஓட்டுனராக இருந்தார்.
சென்னை-- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லி அடுத்த திருமழிசை கூட்டுசாலையை பேருந்து கடந்தபோது, ஓட்டுனர் திடீரென 'பிரேக்' பிடித்துள்ளார்.
அப்போது பேருந்து படிக்கட்டு அருகே நின்றிருந்த முருகன், நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரியவந்தது. ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.