/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மந்தகதியில் நடக்கும் சாலை பணி பாதயாத்திரை பக்தர்கள் அவஸ்தை
/
மந்தகதியில் நடக்கும் சாலை பணி பாதயாத்திரை பக்தர்கள் அவஸ்தை
மந்தகதியில் நடக்கும் சாலை பணி பாதயாத்திரை பக்தர்கள் அவஸ்தை
மந்தகதியில் நடக்கும் சாலை பணி பாதயாத்திரை பக்தர்கள் அவஸ்தை
ADDED : மார் 25, 2024 05:30 AM

சித்தாமூர், : சித்தாமூர் அருகே மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் இருந்து பெருக்கரணை கிராமத்திற்கு செல்லும், 3.6 கி.மீ., அளவிலான தார் சாலை உள்ளது.
இச்சாலையை கரிக்கந்தாங்கல், பழவூர், கன்னிமங்கலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். பெருக்கரணை கிராமத்தில் உள்ள மரகத தண்டாயுதபாணி கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது.
இந்த சாலை சேதமடைந்ததால், 2023 ஜனவரி மாதம், 5.03 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஆக., மாதம் சாலை சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன. சாலை அமைக்கும் பணி மந்தகதியில் நடந்து வருவாதல், 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 3 கி.மீ., துாரத்திற்கு சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளதால், நேற்று பங்குனி உத்திர விழாவிற்கு மரகத தண்டாயுதபாணி கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்த முதியோர், குழந்தைகள் மற்றும் பக்தர்களின் கால்களில் ஜல்லிக்கற்கள் பதம்பார்த்தன.
மேலும், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பக்தர்களும் சிரமப்பட்டனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

