/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆட்டோவில் தப்பிய கொள்ளையர்கள் ரோந்து போலீசாரிடம் சிக்கினர்
/
ஆட்டோவில் தப்பிய கொள்ளையர்கள் ரோந்து போலீசாரிடம் சிக்கினர்
ஆட்டோவில் தப்பிய கொள்ளையர்கள் ரோந்து போலீசாரிடம் சிக்கினர்
ஆட்டோவில் தப்பிய கொள்ளையர்கள் ரோந்து போலீசாரிடம் சிக்கினர்
ADDED : ஏப் 01, 2024 02:32 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நேற்று அதிகாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சின்ன காஞ்சிபுரம் பாண்டுரங்கன் தெரு அருகே, தலைமை காவலர் நித்தியானந்தம் என்பவர், அதிகாலை 3:00 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அவ்வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரித்துள்ளார். அப்போது, ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அதில் அமர்ந்திருந்த நபர் என, இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
அவர்களை போலீசார் நித்தியானந்தம் சோதனை செய்ததில், தங்கம், வெள்ளி பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
உடனடியாக, இருவரையும் அங்கேயே விசாரித்ததில், ஆட்டோ ஓட்டுனர் விக்னேஷ், 35; வண்டலுாரைச் சேர்ந்தவர் என்றும், ஆட்டோவில் அமர்ந்திருந்தவர் ஏகாம்பரம், 48; ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
போலீசார் விசாரணையில், சின்ன காஞ்சிபுரம் ஆணைக்கட்டி தெருவில் உள்ள தாசில்தார் சீனிவாசன் என்பவரது வீட்டில், ஆட்கள் யாரும் இல்லாததால், கதவை உடைத்து, 10 சவரன் தங்க நகை, 500 கிராம் வெள்ளி பொருட்கள், 2 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து வந்ததை தெரிவித்துள்ளனர்.
இருவரையும், விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்து, நேற்று கைது செய்தனர். தங்கம், வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

