/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டூ - வீலரில் சென்றவர் மரத்தில் மோதி பலி
/
டூ - வீலரில் சென்றவர் மரத்தில் மோதி பலி
ADDED : ஜூலை 31, 2024 01:27 AM
சித்தமூர்:விழுப்புரம் மாவட்டம், ராயநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், 35. கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர், நேற்று காலை, தன் பேஷன் ப்ரோ இருசக்கர வாகனத்தில், வீட்டில் இருந்து மதுராந்தகம் சென்றுள்ளார்.
அப்போது, சித்தாமூர் அடுத்த பழவூர் கிராமத்தில், அதிவேகமாக சென்றதால் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், தலையில் பலத்த காயம் அடைந்த சரவணன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த சித்தாமூர் போலீசார், சரவணனின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

