/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊனமாஞ்சேரியில் பூங்கா அமைக்க இடமிருந்தும் நிதியில்லாமல் தவிப்பு
/
ஊனமாஞ்சேரியில் பூங்கா அமைக்க இடமிருந்தும் நிதியில்லாமல் தவிப்பு
ஊனமாஞ்சேரியில் பூங்கா அமைக்க இடமிருந்தும் நிதியில்லாமல் தவிப்பு
ஊனமாஞ்சேரியில் பூங்கா அமைக்க இடமிருந்தும் நிதியில்லாமல் தவிப்பு
ADDED : பிப் 27, 2025 11:38 PM
ஊனமாஞ்சேரி ஊனமாஞ்சேரி ஊராட்சியில், பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்க நிறைய இடவசதி இருந்தும், நிதி ஆதாரம் இல்லாததால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இதில், வண்டலுார் அடுத்த ஊனமாஞ்சேரி வளர்ந்து வரும் ஊராட்சியாக உள்ளது. இங்கு ஒன்பது வார்டுகளில், 120 தெருக்கள் உள்ளன.
தவிர, 200 ஏக்கர் பரப்புள்ள ஏரி, இரண்டு குளங்கள், நான்கு குட்டைகள், எட்டு பொது கிணறுகள் என, நிலத்தடி நீர்மட்டம் செழிப்பாக உள்ளது. தவிர, மத்திய அரசின் 'ஜல்ஜீவன்' திட்டமும் நடைமுறையில் உள்ளது. ஆனால், பொதுமக்கள் பயன்பாட்டிக்கு பூங்கா அமைக்க இடமிருந்தும், நிதி ஆதாரம் இல்லாததால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டு கணக்குப்படி 5,642 நபர்கள் வசிக்கும் இந்த ஊராட்சியில், மக்கள் பொழுது போக்க, ஒரு பூங்கா கூட இல்லை.
இது குறித்து ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும், எந்த நடவடிக்கை இல்லை. எனவே, இப்பகுதியில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகம் கூறியதாவது:
ஊராட்சியில், 12 இடங்களில் பூங்கா அமைக்க தேவையான இடவசதி உள்ளது. உரிய நிதி ஆதாரம் இல்லாததால், பணிகள் கிடப்பில் உள்ளன. வரி வருமானத்தைத் தவிர, ஊராட்சிக்கு வேறு வருமானம் இல்லை.
எனவே, மத்திய மாநில அரசுகள் நிதி வழங்கினால், முதற்கட்டமாக மூன்று பூங்காக்கள் உருவாக்க, ஊராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

