/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீ ட்டை உடைத்து கார் திருட்டு மூன்று வாலிபர்கள் கைது
/
வீ ட்டை உடைத்து கார் திருட்டு மூன்று வாலிபர்கள் கைது
வீ ட்டை உடைத்து கார் திருட்டு மூன்று வாலிபர்கள் கைது
வீ ட்டை உடைத்து கார் திருட்டு மூன்று வாலிபர்கள் கைது
ADDED : ஆக 02, 2024 02:44 AM
திருப்போரூர்:வண்டலுார் அடுத்த ரத்தினமங்கலத்தில் வசிப்பவர் யுவராஜ், 28. இவர், கடந்த மாதம் 24ம் தேதி, குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில், 25ம் தேதி அவரது வீட்டின் வெளிக்கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக, அருகில் வசிப்பவர்கள் யுவராஜுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனால், யுவராஜ் வீட்டிற்கு திரும்பினார். வீட்டு கேட்டின் பூட்டு, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'ஹூண்டாய் அசென்ட்' காரை காணவில்லை. அதுமட்டுமின்றி, வீட்டின் உள்ளே பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தன.
பீரோவில் நகை, பணம் எதுவும் இல்லாததால், வீட்டில் இருந்த கார் சாவியை எடுத்து, காரை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, தாழம்பூர் போலீசில் யுவராஜ் புகார் அளித்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், திண்டிவனம் அருகே கார் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று, ஜி.எஸ்.டி.சாலையில் நின்ற காரை மடக்கி, அதில் இருந்த மூவரை பிடித்து, தாழம்பூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
அதில், துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார், 28, நிக்சன், 28, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி, 33, என்பதும், மூவர் மீதும் விருதுநகர், குன்றத்துார் உள்ளிட்ட காவல் நிலையங்களில், பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
மூவரையும் கைது செய்த போலீசார்,சோழிங்கநல்லுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.