/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் குவிக்கப்பட்டுள்ள மண் செங்கையில் போக்குவரத்து இடையூறு
/
சாலையில் குவிக்கப்பட்டுள்ள மண் செங்கையில் போக்குவரத்து இடையூறு
சாலையில் குவிக்கப்பட்டுள்ள மண் செங்கையில் போக்குவரத்து இடையூறு
சாலையில் குவிக்கப்பட்டுள்ள மண் செங்கையில் போக்குவரத்து இடையூறு
ADDED : ஆக 18, 2024 12:45 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியில், மழைநீர் கால்வாய் கட்டும் பணியின்போது தோண்டப்பட்டு, சாலையில் குவிக்கப்பட்டுள்ள மண்ணை அப்புறப்படுத்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு நகராட்சியில், அண்ணா சாலை குண்டூர், கோலபுரம், பாரதியார் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மழைநீர் கால்வாயை துார்வாரி, புதிய கால்வாய் கட்ட வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம் நகரவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன்பின், மழைநீர் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க, நகராட்சி பொது நிதியில் இருந்து, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இப்பணிக்கு, கடந்த மார்ச் மாதம், 'டெண்டர்' விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் பணி மேற்கொண்டனர்.
தற்போது, மழைநீர் கால்வாய் கட்டும் பணிக்காக துார்வாரிய மண்ணை, சாலையில் குவித்து வைத்துள்ளனர்.
அதனால், இவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, மழைக்காலத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து, சாலையில் குவித்து வைத்துள்ள மண்ணை அப்புறப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, நகராட்சி பொறியியல் துறை அதிகாரிகள் கூறும்போது, ”நகரில் மழைநீர் கால்வாய் கட்டும் பணியை உடனடியாக முடிக்கவும், சாலையில் குவித்து வைத்துள்ள மண்ணை அப்புறப்படுத்தவும், ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்,'' என்றனர்.