/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாறுமாறாக கடக்கும் லாரிகள் மதுராந்தகத்தில் விபத்து அபாயம்
/
தாறுமாறாக கடக்கும் லாரிகள் மதுராந்தகத்தில் விபத்து அபாயம்
தாறுமாறாக கடக்கும் லாரிகள் மதுராந்தகத்தில் விபத்து அபாயம்
தாறுமாறாக கடக்கும் லாரிகள் மதுராந்தகத்தில் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 27, 2024 12:10 AM

மதுராந்தகம்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இரு மார்க்கத்திலும், நாள்தோறும் ஆயிரக்கணக்கானவாகனங்கள் செல்கின்றன.
இதில், கருங்குழி அருகே உள்ள மேட்டுப்பாளையம் சனீஸ்வரன் கோவில் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் உரிய அனுமதியின்றி, சாலையின் மையத் தடுப்பு உடைத்து வழி அமைத்துள்ளனர்.
இதைப் பயன்படுத்தி, ஜல்லிக்கற்களை ஏற்றி வரும் லாரிகள், வேடந்தாங்கல், உத்திரமேரூர், காஞ்சிபுரம் செல்லும் அரசு, தனியார் பேருந்துகள், இருசக்கர வாகன ஓட்டிகள் ஆபத்தைஉணராமல் தேசிய நெடுஞ்சாலையில், தடை செய்யப்பட்ட சாலை வளைவில் கடக்கின்றனர்.
இதனால், தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. எனவே, இப்பகுதியில் கற்களைக் கொண்டு தடை ஏற்படுத்த வேண்டும்.
மேலும், விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், போலீசாரை நியமித்து கண்காணிக்க வேண் டும் என, சமூகஆர்வர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.