/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போதை மாத்திரை விற்ற இருவர் கைது
/
போதை மாத்திரை விற்ற இருவர் கைது
ADDED : செப் 09, 2024 06:18 AM
தாம்பரம்: குரோம்பேட்டை யில் போதை மாத்திரை விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து 310 கிராம் போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது.
தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில், கஞ்சா, போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, குரோம்பேட்டை போலீசார், அதே பகுதியை சேர்ந்த விஜய், 28, என்பவர் வீட்டில், நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
அப்போது, அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 310 போதை மாத்திரைகள், 200 கிராம் கஞ்சா மற்றும் 36,000 ரூபாய், நான்கு மொபைல் போன் ஆகியவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர். விஜய் மற்றும் அவருடன் தங்கி இருந்த ஜாஸ்மின், 27, என்ற பெண் ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரித்தனர். இதில், ஜாஸ்மினுக்கு ஏற்கனவே வேறொருவருடன் திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளது தெரிந்தது.
கணவரை பிரிந்து வந்த ஜாஸ்மின், விஜய்யுடன் தங்கி, ஆன்லைன் வாயிலாக போதை மாத்திரைகளை வாங்கி விற்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, விஜய், ஜாஸ்மின் ஆகிய இருவரையும், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.