/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுார் பஸ் நிறுத்தத்தில் கஞ்சா விற்ற இருவர் கைது
/
வண்டலுார் பஸ் நிறுத்தத்தில் கஞ்சா விற்ற இருவர் கைது
வண்டலுார் பஸ் நிறுத்தத்தில் கஞ்சா விற்ற இருவர் கைது
வண்டலுார் பஸ் நிறுத்தத்தில் கஞ்சா விற்ற இருவர் கைது
ADDED : மே 15, 2024 10:14 PM
கூடுவாஞ்சேரி:மேகாலயா மாநிலம், கிழக்கு காசி மலைப்பகுதியை சேர்ந்தவர் கிஷன் பர்மன், 27, என்பவர், வண்டலுார் பேருந்து நிலையம் அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.
இது தொடர்பாக, அப்பகுதிவாசிகள் மற்றும் பயணியர் அளித்த புகாரின்படி, கூடுவாஞ்சேரி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், சம்பவ இடத்த்ற்கு சென்றனர்.
அப்போது, அங்கு சென்று விற்பனையில் ஈடுபட்டிருந்த கிஷன் பர்மனை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், பெங்களூருவை சேர்ந்த ஆசிப்கான், 29, என்பவரிடமிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வதாகவும், அவர், மயிலாப்பூரில் வசிப்பதாகவும், கிஷன் பர்மன் போலீசாரிடம் கூறினார்.
அதன்படி, மயிலாப்பூர் சென்ற போலீசார், ஆசிப்கானை கைது செய்து, அவரிடம் இருந்த 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.