/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நாய் கடித்து இரு சிறுவர்கள் காயம்
/
நாய் கடித்து இரு சிறுவர்கள் காயம்
ADDED : ஜூன் 17, 2024 03:07 AM
அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் அருகே ஒரத்தி அடுத்த விண்ணம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார், 38. இவருக்கு திருமணமாகி, சிவகாமி, 32, என்ற மனைவியும், ஹரிஷ், 14, சஞ்சய், 13, ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, கதவு தாழ்ப்பாள் போடாமல், சற்று கதவை திறந்து வைத்து துாங்கினர்.
அதிகாலை நேரத்தில், அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறி நாய், வீட்டின் உள்ளே சென்றுள்ளது. இதனால், வீட்டில் இருந்த சசிகுமார் நாயை விரட்ட முயன்றுள்ளார்.
அப்போது, வெறி நாய், சிறுவர்களான ஹரிஷ் மற்றும் சஞ்சய்யை கடித்துள்ளது. பின், அந்த நாயை விரட்டி அடித்துள்ளனர். நாய் கடித்ததில் காயமடைந்த சிறுவர்களை மீட்டு, முதலுதவி சிகிச்சைக்காக, ஒரத்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில், சிறுவர்கள் சிகிச்சை பெற்று, நேற்று மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினர்.