/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிலிண்டர் வெடித்து விபத்து சிலாவட்டத்தில் இருவர் காயம்
/
சிலிண்டர் வெடித்து விபத்து சிலாவட்டத்தில் இருவர் காயம்
சிலிண்டர் வெடித்து விபத்து சிலாவட்டத்தில் இருவர் காயம்
சிலிண்டர் வெடித்து விபத்து சிலாவட்டத்தில் இருவர் காயம்
ADDED : செப் 12, 2024 01:31 AM
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த சிலாவட்டத்தில், 15,000 டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன சேமிப்பு தளம் கட்டுமான பணிகள், சில மாதங்களாக நடந்து வருகின்றன.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த பரிமளம், 52, மற்றும் காட்டுமன்னார்கோவில், மேலபருத்திக்குடி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன், 36, ஆகிய இருவரும், கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.
தகர சீட்டால் அமைக்கப்பட்டுள்ள வீடுகளில் தங்கியிருந்த அவர்கள், நேற்று பணியாளர்களுக்கு உணவு சமைக்கும் பணியில், பரிமளம் மற்றும் முத்துக்குமரன் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக சிலிண்டர் கசிவு ஏற்பட்டு, திடீரென வெடித்துள்ளது. உடனடியாக, அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற மதுராந்தகம் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிலிண்டர் விபத்தில் சிக்கிய ஒப்பந்த பணியாளர்கள், சிறிய அளவிலான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.