/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் தினசரி மாயமாகும் டூ - வீலர்கள்
/
கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் தினசரி மாயமாகும் டூ - வீலர்கள்
கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் தினசரி மாயமாகும் டூ - வீலர்கள்
கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் தினசரி மாயமாகும் டூ - வீலர்கள்
ADDED : செப் 09, 2024 11:50 PM

கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையத்தில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
அவர்கள், தாங்கள் கொண்டுவரும் இருசக்கர வாகனங்களை, ரயில் நிலைய வளாகத்திலேயே நிறுத்திவிட்டு, பணி நிமித்தமாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்கின்றனர்.
பணி முடிந்து திரும்பி வந்து பார்க்கும்போது, தாங்கள் நிறுத்திவிட்டுச் சென்ற இருசக்கர வாகனங்கள் மாயமானதால் அதிர்ச்சியடைகின்றனர்.
தற்போது, மத்திய அரசின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. அதனால், ரயில் நிலையம் வரும் பயணியர் பணி முடிந்த வளாகப் பகுதியில், தங்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.
அவ்வப்போது போலீசார் ரோந்து சென்றாலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் டூ - வீலர்கள் மாயமாவது தொடர்கிறது. தினசரி ஐந்துக்கும் மேற்பட்ட டூ - வீலர்கள் திருடு போவதாக, போலீசார் தெரிவிக்கின்றனர்.
கூடுவாஞ்சேரி போலீசார் கூறியதாவது:
ரயில் நிலையம் வரும் பயணியர், லால் பகதுார் சாஸ்திரி தெரு மற்றும் ரயில் நிலையம் அருகில் உள்ள சாலையில், தங்களின் வாகனங்களை பார்க்கிங் செய்யக்கூடாது என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், பயணியர் எச்சரிக்கையை பொருட்படுத்துவதில்லை. வாகனம் திருடுபோன பின், புலம்பியபடி வந்து புகார் அளிக்கின்றனர்.
இப்பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் அமைக்க, முறையாக டெண்டர் கோரப்படவில்லை. எனவே, இங்கு வாகனங்களை நிறுத்துவது பாதுகாப்பானது அல்ல.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, ரயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய அரசு திட்டத்தின் கீழ், ரயில் நிலைய பராமரிப்பு பணி, கடந்த ஆறு மாதங்களாக, தொடர்ந்து நடந்து வருகிறது. இன்னும் அது முழுமை அடையவில்லை.
இப்பணிகள் இன்னும் ஆறு மாதத்திற்கு மேல் நடைபெற வாய்ப்பு உள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்த பின் தான், முறையாக டெண்டர் கோரப்பட்டு, வாகன பார்க்கிங் வசதி மேம்படுத்தப்படும்.
அதுவரை, இங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு, வாகனம் காணவில்லை என்றால், ரயில்வே நிர்வாகம் பொறுப்பு ஏற்க இயலாது.
இவ்வாறு அவர் கூறினார்.