/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி சார்-பதிவாளர் ஆபீசில் கணக்கில் வராத ரூ.5.62 லட்சம் பறிமுதல்
/
கூடுவாஞ்சேரி சார்-பதிவாளர் ஆபீசில் கணக்கில் வராத ரூ.5.62 லட்சம் பறிமுதல்
கூடுவாஞ்சேரி சார்-பதிவாளர் ஆபீசில் கணக்கில் வராத ரூ.5.62 லட்சம் பறிமுதல்
கூடுவாஞ்சேரி சார்-பதிவாளர் ஆபீசில் கணக்கில் வராத ரூ.5.62 லட்சம் பறிமுதல்
ADDED : டிச 14, 2024 07:25 PM
கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியிலுள்ள நந்திவரம் - நெல்லிக்குப்பம் சாலையில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில், கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு சார் - பதிவாளராக, வைத்தியலிங்கம் என்பவர் இருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் கார்த்திகை தீப திருநாள் மற்றும் கார்த்திகை மாதத்தின் கடைசி நாள் என்பதால், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இடம், வீடு, வாங்கியோர், பத்திர பதிவு செய்ய சார் - பதிவாளர் அலுவலகத்தில் திரண்டிருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வந்த புகாரின்படி, மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சரவணன் தலைமையில், ஆய்வாளர் அண்ணாதுரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து, நள்ளிரவு வரை ஆய்வு செய்தனர்.
அப்போது, கணக்கில் வராத 5.62 லட்சம் ரூபாய், பத்திரப்பதிவுத் துறை அலுவலகத்திற்கு தொடர்பில்லாத முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, மேலும் விசாரிக்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன், சார் - பதிவாளர் வைத்தியலிங்கம் பணி தொடர்பாக நீதிமன்றம் சென்ற நிலையில், துணை சார் - பதிவாளர் பணியில் இருந்த போது, பொதுமக்கள் புகார் அளித்ததாக சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த அதிகாரிகள், கணக்கில் வராத 4 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை பறிமுதல் செய்து சென்றனர்.
தற்போது இதேபோல், மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஆய்வு செய்து, 5.62 லட்சம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்திருப்பது, பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.