/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒன்றிய அலுவலக வாகனங்கள் ரூ.1.84 ஆயிரத்துக்கு ஏலம்
/
ஒன்றிய அலுவலக வாகனங்கள் ரூ.1.84 ஆயிரத்துக்கு ஏலம்
ADDED : மார் 05, 2025 07:39 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் 59 ஊராட்சிகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது.
அதில், கிராம ஊராட்சி மற்றும் வட்டார ஊராட்சி அலுவலர்களுக்கு, ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிக்க வாகனங்கள் வழங்கப்பட்டன.
கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், பழுது காரணமாக, கடந்த இரண்டு வருடங்களாக, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தன. அவற்றை பொது ஏலம் விட அறிவிப்பு செய்து, நேற்று, ஏலம் விடப்பட்டது.
அதில், இரண்டு வாகனங்களும் 1.84 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. பணத்தை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் செலுத்தி, வாகனங்களை ஏலம் எடுத்த நபர்கள் கொண்டு சென்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.