/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாதியில் விடப்பட்ட வடிகால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு
/
பாதியில் விடப்பட்ட வடிகால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு
பாதியில் விடப்பட்ட வடிகால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு
பாதியில் விடப்பட்ட வடிகால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு
ADDED : செப் 09, 2024 06:22 AM
பெருங்களத்துார்: தாம்பரம், பெருங்களத்துார், முடிச்சூர் வழியாக, ஜி.எஸ்.டி., - வாலாஜாபாத் சாலைகளை இணைக்கிறது, முடிச்சூர் சாலை.
எப்போதும், போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. நேராக அமைக்காமல் வளைத்து கட்டப்படுவதால், மழைக்காலத்தில் நீரோட்டம் தடைபட்டு, வெள்ள பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
தவிர, பல இடங்களில் கால்வாயை இணைக்காமல் பாதியிலேயே விட்டுள்ளனர். பழைய பெருங்களத்துார், அம்பேத்கர் சிலை அருகில் கால்வாயை பாதியிலேயே விட்டுள்ளனர்.
கடை மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த கால்வாயில் தேங்கி, சாலையில் ஓடுகிறது. இதனால், கொசு தொல்லையும், துர்நாற்றமும் அதிகரித்து, அப்பகுதி மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர்.
சுகாதார சீர்கேடு நிலவுவதால், 'டெங்கு' உள்ளிட்ட மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. நெடுஞ்சாலைத் துறையினர், விடுபட்ட இடத்தில் கால்வாயை இணைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.