/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சூணாம்பேடு பஜார் பகுதியில் கழிப்பறை அமைக்க வலியுறுத்தல்
/
சூணாம்பேடு பஜார் பகுதியில் கழிப்பறை அமைக்க வலியுறுத்தல்
சூணாம்பேடு பஜார் பகுதியில் கழிப்பறை அமைக்க வலியுறுத்தல்
சூணாம்பேடு பஜார் பகுதியில் கழிப்பறை அமைக்க வலியுறுத்தல்
ADDED : மார் 01, 2025 11:32 PM
சூணாம்பேடு, சூணாம்பேடு ஊராட்சியின் மையப் பகுதியில் பஜார் பகுதி உள்ளது.
இங்கு காவல் நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம், வங்கி, வேளாண் கூட்டுறவு சங்கம், கிராம நிர்வாக அலுவலகம், பேருந்து நிறுத்தம், பள்ளி, வங்கி போன்றவை செயல்பட்டு வருகின்றன.
மேலும் இங்கு, 50க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன. பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தை சூணாம்பேடு, மணப்பாக்கம், அரசூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மதுராந்தகம், செங்கல்பட்டு, புதுச்சேரி, சென்னை போன்ற பகுதிகளுக்குச் செல்ல பயன்படுத்துகின்றனர்.
அந்த வகையில், தினமும் பஜார் பகுதிக்கு, ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
அதிகமானோர் குவியும் இந்த பஜார் பகுதியில், பொது கழிப்பறை வசதி இல்லை. இதனால் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
சிலர், வெண்ணாங்குப்பட்டு சாலை ஓரத்தில் இயற்கை உபாதைகளை கழிப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பஜார் பகுதியில் பொது கழிப்பறை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.