/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேதகிரீஸ்வரர் சித்திரை விழா நாளை பந்தக்கால்
/
வேதகிரீஸ்வரர் சித்திரை விழா நாளை பந்தக்கால்
ADDED : மார் 01, 2025 11:45 PM
திருக்கழுக்குன்றம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவிற்காக, நாளை பந்தக்கால் நடப்படுகிறது.
ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. நான்கு வேதங்களே மலைக்குன்றுகளாக வீற்று, வேதகிரீஸ்வரர் சுயம்பு மலைகொழுந்தாக வீற்றுள்ளார்.
அம்பாள் திரிபுரசுந்தரி அம்மன், அருகில் உள்ள பக்தவச்சலேஸ்வரர் கோவிலில் வீற்றுள்ளார்.
இக்கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை பெருவிழா உற்சவம் 10 நாட்கள் கொண்டாடப்படும்.
இவ்விழா, மே மாதம் முதல் வாரத்தில் நடத்தப்பட உள்ளது. இதை முன்னிட்டு, இக்கோவிலில் நாளை காலை 9:00 முதல் 10:00 மணிக்குள், உற்சவ பந்தக்கால் நடப்படுவதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.