/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
/
வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஜூலை 04, 2024 12:43 AM

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், மைலை கிராமத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த, கிராம மக்கள் முடிவுசெய்தனர்.
அதன்படி, கோவில் வளாகத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர், செல்வ விநாயகர், பாலமுருகன், பால் முனீஸ்வரர்,அய்யப்பன் ஆகிய சுவாமிகளின் மூலஸ்தானகோபுரத்துடன் கூடிய திருப்பணி வேலைகள் நடந்தன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் யாகசாலை அமைத்து யாக பூஜைகள், கணபதி ஹோமம், அனுக்ஞை பூஜை, நவக்கிரக ஹோமம், கோபூஜை ஆகியவை நடந்தன. தொடர்ந்து, நேற்று காலை 7:00 மணிக்கு, யாகசாலையில் வைக்கப்பட்டுள்ள புனிதநீர் அடங்கியகலச புறப்பாடு நடைபெற்று, கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சுவாமிகளுக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விழாவில், திரளானபக்தர்கள் பங்கேற்றனர்.