/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அறங்காவலர் விண்ணப்பங்கள் சரிபார்ப்பு
/
அறங்காவலர் விண்ணப்பங்கள் சரிபார்ப்பு
ADDED : செப் 15, 2024 11:11 PM
திருக்கழுக்குன்றம், : ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்திபெற்றது. கோவிலில், வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன் உள்ளிட்ட சுவாமியர் வீற்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
நான்கு வேதங்களே, சிவபெருமான் திருவடியில் வீற்றிருக்க ஆசிபெற்று, மலைக்குன்றுகளாக வீற்றுள்ளன. ஒரு குன்றின் உச்சியில் கோவில் அமைந்துள்ள நிலையில், பவுர்ணமி கிரிவல தலமாக விளங்குகிறது.
அறநிலையத்துறை கோவில்களில், பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிக்க முடிவெடுத்து, கடந்த ஜூனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
இக்கோவில் அறங்காவலராக விரும்பி, 12 பேர் விண்ணப்பித்தனர். அத்துறை ஆய்வாளர் தரப்பில், விண்ணப்பதாரர்களின் ஆவணங்கள், நேற்று முன்தினம் சரிபார்க்கப்பட்டன.
அதில், 10 பேர் மட்டுமே பங்கேற்ற நிலையில், விண்ணப்பதாரர் ஆதார், வாக்காளர் அடையாள எண், சொத்து, மருத்துவம், போலீஸ் உள்ளிட்ட சான்று ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

