/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடப்பாக்கத்தில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்
/
கடப்பாக்கத்தில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்
ADDED : செப் 09, 2024 06:41 AM

செய்யூர்: இந்தியா முழுதும், விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று முன்தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பாக, பொது இடங்கள், கோவில்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில், பிரமாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
வழிபாடு முடிந்ததை அடுத்து, நேற்று மதுராந்தகம், அச்சிறுபாக்கம், சித்தாமூர், பவுஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், செங்கல்பட்டு மாவட்ட ஹிந்து முன்னணி இயக்கம் சார்பாக வைக்கப்பட்டு இருந்த, 13 விநாயகர் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு சென்று, கடப்பாக்கம் கடற்கரையில், போலீஸ் பாதுகாப்புடன் விஜர்சனம் செய்யப்பட்டது.
இதில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.