/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓராண்டாக நீளும் சாலை பணி மறியல் செய்ய கிராம மக்கள் முடிவு
/
ஓராண்டாக நீளும் சாலை பணி மறியல் செய்ய கிராம மக்கள் முடிவு
ஓராண்டாக நீளும் சாலை பணி மறியல் செய்ய கிராம மக்கள் முடிவு
ஓராண்டாக நீளும் சாலை பணி மறியல் செய்ய கிராம மக்கள் முடிவு
ADDED : ஆக 14, 2024 10:51 PM

சித்தாமூர்:சித்தாமூர் அருகே பழவூர் கிராமத்தில், மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு நெடுஞ்சாலையில் இருந்து பெருக்கரணை கிராமத்திற்கு செல்லும் 3.6 கி.மீ., அளவிலான தார் சாலை உள்ளது.
இந்த சாலையை கன்னிமங்கலம், கரிக்கந்தாங்கல் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்த சாலை, பல ஆண்டுகளாக சேதமடைந்து இருந்ததால், சாலையை சீரமைக்க, 2023ம் ஆண்டு ஜன., 30ம் தேதி, 5.03 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பின், 2023ம் ஆண்டு ஆக., மாதம் சாலை சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு, சாலை அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில், சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டி நிரவப்பட்ட நிலையில், கடந்த பிப்., மாதம் சாலைப்பணி நிறுத்தப்பட்டது.
இதனால், சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், ஜல்லியில் சறுக்கி விபத்துக்குள்ளாகின்றனர். மேலும், சாலையில் புழுதி பறப்பதால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர் என, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
பின், சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டு, 1.3 கி.மீ., நீளத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டது. பின், மீண்டும் சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டதால், ஜல்லிக்கற்கள் கொட்டி நிரவப்பட்டுள்ள சாலையில் கடந்து செல்ல அப்பகுதிவாசிகள் சிரமப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
பெருக்கரணை கிராமத்தில் வசிக்கும் பலர், வேலைக்காக தினசரி பழவூர் சாலை வழியாக சித்தாமூர் சென்று வருகிறோம்.
கடந்த ஆண்டு ஆக., மாதம் சாலை சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. பின், சாலை பணி நிறுத்தப்பட்டது. பின் மீண்டும் துவங்கப்பட்டது. அதை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன் நிறுத்தப்பட்டது.
அதனால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தும் மற்றும் நடுபழனி முருகன் கோவிலுக்கு செல்லும் இந்த பிரதான சாலை, ஓராண்டாக சீரமைப்புப் பணி நடந்து வருவது, கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த சில நாட்களில் சாலை பணி நிறைவு செய்யப்படவில்லை எனில், பொதுமக்கள் ஒன்றிணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.