/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சூணாம்பேடு - சென்னை பஸ் இயக்குவது எப்போது?
/
சூணாம்பேடு - சென்னை பஸ் இயக்குவது எப்போது?
ADDED : செப் 07, 2024 07:20 PM
சூணாம்பேடு:சூணாம்பேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இல்லீடு, காவனுார், புத்திரன்கோட்டை, நுகும்பல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், 30,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தொழிற்சாலை மற்றும் வணிக வளாகங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
சூணாம்பேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, தினமும் 100க்கும் மேற்பட்டோர் மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டுக்கு, பள்ளி மற்றும் பணி நிமித்தமாக சென்று வருகின்றனர்.
சூணாம்பேடு வழியாக சென்னை - புதுச்சேரி செல்லும் தடம் எண்: 83ஏ என்ற அரசு பேருந்து மற்றும் நான்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சூணாம்பேடு பகுதியில் ஏராளமானோர் பேருந்தில் பயணம் செய்கின்றனர். மேலும், காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள் போதிய பேருந்து இல்லாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் அபாயகரமாக படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர். விழாக்காலங்களில் பேருந்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே, பயணியரின் நலன் கருதி, சூணாம்பேட்டில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.