/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கழிப்பறை கட்டடம் படுமோசம் சீரமைக்கும் பணி எப்போது?
/
கழிப்பறை கட்டடம் படுமோசம் சீரமைக்கும் பணி எப்போது?
கழிப்பறை கட்டடம் படுமோசம் சீரமைக்கும் பணி எப்போது?
கழிப்பறை கட்டடம் படுமோசம் சீரமைக்கும் பணி எப்போது?
ADDED : ஆக 09, 2024 11:31 PM

மறைமலைநகர் : மறைமலைநகர் நகராட்சி 17வது வார்டில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு, வடமாநிலத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் வாடகை வீட்டில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு, 10 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி சார்பில், கீழக்கரணை - காமராஜர் சாலையில் பொது கழிப்பறை கட்டப்பட்டது. ஆனால், கழிப்பறை கட்டடம் முறையாக பராமரிக்கப்படாததால், தண்ணீர் குழாய்கள் உடைந்து பாழடைந்துள்ளது.
இதன் காரணமாக, இப்பகுதி மக்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், கதவுகள் உடைந்துள்ளது. இதனால், பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடம் வீணாகி வருகிறது.
எனவே, சேதமடைந்த கழிப்பறை கட்டடத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்காக கொண்டு வர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.