/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தற்காலிக பேருந்து நிலையத்தில் ஓய்வு அறை ஏற்படுத்தப்படுமா?
/
தற்காலிக பேருந்து நிலையத்தில் ஓய்வு அறை ஏற்படுத்தப்படுமா?
தற்காலிக பேருந்து நிலையத்தில் ஓய்வு அறை ஏற்படுத்தப்படுமா?
தற்காலிக பேருந்து நிலையத்தில் ஓய்வு அறை ஏற்படுத்தப்படுமா?
ADDED : ஏப் 18, 2024 10:53 PM

மதுராந்தகம்:மதுராந்தகம் அண்ணா பேருந்து நிலையம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு, புதிதாக 2.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இதன் காரணமாக, தற்காலிக பேருந்து நிலையம், மதுராந்தகம் வடக்கு பைபாஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிக்கு வேலைக்கு செல்வோர் என, நாள்தோறும் 5,000த்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் 23 நகர பேருந்துகள், புறநகர் பேருந்துகள் 22 என, 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்குகின்றன.
இதில், பணியாற்றும் பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு ஓய்வு அறை இல்லாததால், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் நலன் கருதி, தற்காலிக பேருந்து நிலையத்தில் ஓய்வு அறை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.