/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காற்றாடி திருவிழாவை காண பேருந்துகள் நீட்டிக்கப்படுமா?
/
காற்றாடி திருவிழாவை காண பேருந்துகள் நீட்டிக்கப்படுமா?
காற்றாடி திருவிழாவை காண பேருந்துகள் நீட்டிக்கப்படுமா?
காற்றாடி திருவிழாவை காண பேருந்துகள் நீட்டிக்கப்படுமா?
ADDED : ஆக 16, 2024 11:55 PM
மாமல்லபுரம் : கோவளம் வரை இயக்கப்படும் மாநகர் பேருந்துகளை, திருவிடந்தை சர்வதேச காற்றாடி திருவிழா பகுதி வரை, இரண்டு நாட்களுக்கு நீடிக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் வலியுறுத்துகின்றனர்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை, மீடியா பாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, திருவிடந்தை பகுதியில் சர்வதேச காற்றாடி திருவிழாவை, நேற்று முன்தினம் முதல் நடத்துகிறது. நாளை வரை தொடர்ந்து நடத்தப்படுகிறது.
இதை காண செல்வோர், கார், இருசக்கர வாகனம் என, தனி வாகனத்தில் மட்டுமே செல்ல முடியும். இப்பகுதிக்கு நேரடி அரசு பேருந்து வசதி இல்லை. இன்றும், நாளையும் அரசு விடுமுறை நாட்கள் என்பதால், பயணியர் காற்றாடி திருவிழாவை காண, ஆர்வம் காட்டுவர்.
தனி வாகன வசதியற்றவர்கள், அரசு பேருந்தில் தான் செல்ல முடியும்.பிராட்வே - கோவளம் இடையே, மாநகர் பேருந்துகள் ஏராளமாக இயக்கப்படுகின்றன.
காற்றாடி திருவிழா நடக்கும் பகுதி, கோவளத்திலிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ளது. அதனால், பிற்பகல் முதல் மாலை வரை, கோவளம் வரை இயக்கப்படும் மாநகர் பேருந்துகளை, விழா பகுதி வரை நீட்டிக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

