/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நிரந்தர கொள்முதல் நிலையம் கருநிலத்தில் அமைக்கப்படுமா?
/
நிரந்தர கொள்முதல் நிலையம் கருநிலத்தில் அமைக்கப்படுமா?
நிரந்தர கொள்முதல் நிலையம் கருநிலத்தில் அமைக்கப்படுமா?
நிரந்தர கொள்முதல் நிலையம் கருநிலத்தில் அமைக்கப்படுமா?
ADDED : மே 15, 2024 10:30 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், கருநிலம், வில்லியம்பாக்கம், திருவடிசூலம் உள்ளிட்ட மூன்று கிராமங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகின்றன.
திறந்தவெளியில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுவதால், கோடை மழையில் நெல் குவியல்கள் மற்றும் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகின்றன.
சமீபத்தில் பெய்த கோடை மழையில், நுாற்றுக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்தன. இதையடுத்து, இந்த கொள்முதல் நிலையங்களுக்கு தார்ப்பாய் வழங்கப்பட்டு, நெல் மூட்டைகள் மூடி பாதுகாக்கப்பட்டன.
இது குறித்து, கருநிலம் கிராம மக்கள் கூறியதாவது:
கருநிலம் கிராமத்தை சுற்றியுள்ள, ஐந்துக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள், தங்களின் நெல்லை இங்கு கொண்டு வருகின்றனர்.
திறந்த வெளியாக உள்ளதால், நெல் மூட்டைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. எனவே, இங்கு நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைத்து, நெல் மூட்டைகள் நனையாமல் இருக்க கூரை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.