/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சோத்துப்பாக்கம் சாலையில் உயர்மட்ட பாலம் அமையுமா?
/
சோத்துப்பாக்கம் சாலையில் உயர்மட்ட பாலம் அமையுமா?
ADDED : ஜூன் 29, 2024 01:35 AM

மதுராந்தகம்:சோத்துப்பாக்கத்திலிருந்து எல்.எண்டத்துார், உத்திரமேரூர் வழியாக, காஞ்சிபுரம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில், கிளியா நகர் பகுதியில் இருந்து செம்பூண்டி ஏரிக்கு நீர் செல்லும் நீர்வரத்து கால்வாய் உள்ளது.
இந்த கால்வாயில், ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில், தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாக, இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் மாற்றுப்பாதையை பயன்படுத்துகின்றன.
இதனால், அச்சிறுபாக்கம், மேல்மருவத்துார் போன்ற பகுதிகளுக்கு பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், வெளியூர் பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் மிகவும் பாதிப்படைகின்றனர்.
இதுகுறித்து, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, நிரந்தர தீர்வாக, இப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.