/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூட்டியிருந்த வீட்டில் பெண் சடலம் மீட்பு
/
பூட்டியிருந்த வீட்டில் பெண் சடலம் மீட்பு
ADDED : ஜூலை 13, 2024 12:39 AM
திருப்போரூர்:மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் தீபன்கர் சர்க்கார், 30; கார்பென்டர். இவரது மனைவி ரும்பா பர்மன், 23. இவர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமானது.
திருப்போரூர் அடுத்த கோவளம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 10ம் தேதி முதல் நேற்று முன்தினம் இரவு வரை, பல மணி நேரமாக வீடு பூட்டியிருந்தது.
சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர்,ஜன்னல் வழியாக பார்த்தபோது ரும்பாபர்மன் மயக்க நிலையில் கட்டிலில் படுத்துக் கிடந்தார்.
தகவல் அறிந்து வந்த கேளம்பாக்கம்போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மயக்க நிலையில் இருந்தார். உடனே, ஆம்புலன்சை வரவழைத்தனர். அதில் வந்த செவிலியர் அவரை பரிசோதித்தபோது, ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த தீபன்கர் சர்க்கார், பெரும்பாக்கத்தில்பதுங்கி இருப்பது தெரிந்தது. நேற்றுமுன்தினம் இரவு போலீசார் அவரை கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறில் மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்ட நிலையில், பின், மனைவியை கொலை செய்யவில்லை என்றார். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.