UPDATED : நவ 18, 2026 09:27 PM
ADDED : நவ 18, 2026 09:24 PM
அ நிறம் | அளவு
மறைமலை நகர்: மறைமலை நகர் நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இங்கு, 400க்கும் மேற்பட்ட வணிகக் கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை உள்ளன. இப்பகுதியில், உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக, நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து, மறைமலை நகர் சுகாதார அலுவலர்கள் மற்றும் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், கம்பர் தெரு, பாவேந்தர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஆய்வு
செய்தனர். இதில், 10 கடை களில் 100 கிலோ 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்பின் கடை உரிமையாளர்களுக்கு 1,200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
