/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
105 நெல் கொள்முதல் நிலையங்கள் செங்கை மாவட்டத்தில் துவக்கம்
/
105 நெல் கொள்முதல் நிலையங்கள் செங்கை மாவட்டத்தில் துவக்கம்
105 நெல் கொள்முதல் நிலையங்கள் செங்கை மாவட்டத்தில் துவக்கம்
105 நெல் கொள்முதல் நிலையங்கள் செங்கை மாவட்டத்தில் துவக்கம்
ADDED : பிப் 05, 2025 09:14 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு, 105 தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 1.67 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
இதில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாவில், அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. செங்கல்பட்டு, திருப்போரூர், தாம்பரம் தாலுகா பகுதியில், குறைவான அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
சம்பா பருவத்தில், 67,685 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் நடவு செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாராக உள்ளது.
விவசாயிகளிடம் இருந்து, 1.65 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், 2024- - 25 சம்பா பருவத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக, 82 கொள்முதல் நிலையம் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு வாயிலாக 23 கொள்முதல் நிலையம் என, 105 தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, சன்ன ரக நெல் குவிண்டால் 2,450 ரூபாய்க்கும், பொதுரக நெல் குவிண்டால் 2,405 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
கொள்முதல் நிலையங்களில், எவ்வித முறைகேட்டிற்கும் இடமளிக்காத வகையில் ஊழியர்கள் பணிபுரிய வேண்டும்.
விவசாயிகளிடமிருந்து எவ்வித தொகையும் வசூலிக்க கூடாது.
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன், சம்பந்தப்பட்ட கிடங்கு அல்லது நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்க, முதுநிலை மண்டல மேலாளர் நடவடிக்கை எடுக்கவும், 105 இடங்களில் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவும், கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, மணப்பாக்கம் ஊராட்சியில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி துவக்கி வைத்தார்.
இந்நிலையில் தற்போது, 105 தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
விவசாயிகள் புகார் அளிக்க, மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 044- 27427412- 27427414 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.