/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வார இறுதியில் விரைவு பஸ்சில் 14,440 சீட் காலி
/
வார இறுதியில் விரைவு பஸ்சில் 14,440 சீட் காலி
ADDED : பிப் 14, 2024 10:52 PM
சென்னை:கிளாம்பாக்கத்தில் இருந்து, நாளை பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் விரைவு பேருந்துகளில், 14,440 முன்பதிவு இருக்கைகள் காலியாக உள்ளன.
இது, குறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு செல்ல வசதியாக, இணையவழி முன்பதிவு வசதியுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அந்த வகையில் கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும், 283 பேருந்துகளில், இணைய வழியில் 11,848 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 9,794 இருக்கைகள் காலியாக உள்ளன.
இவற்றுடன் விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முறையே 1,762, 1,399, 1,443, 42 என மொத்தம், 14,440 முன்பதிவு இருக்கைகள் காலியாக உள்ளன.
தமிழகம் முழுதும் நாளை இயக்கப்படும் பேருந்துகளில் உள்ள 89,507 இருக்கைகளில், 84,060 இருக்கைகள் காலியாகவும், வரும் 17-ம் தேதி 85,265 இருக்கைகளும், 18ம் தேதி 86,411 இருக்கைகளும் காலியாக உள்ளன.
கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி வாயிலாக முன்பதிவு செய்து, அரசு பேருந்துகளில் பயணிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

