sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் 19 நிரந்தர நெல் கொள்முதல் நிலையம்... மகிழ்ச்சி!:3 இடத்திற்கு நிதி ஒதுக்கியதால் விவசாயிகள் நிம்மதி

/

செங்கையில் 19 நிரந்தர நெல் கொள்முதல் நிலையம்... மகிழ்ச்சி!:3 இடத்திற்கு நிதி ஒதுக்கியதால் விவசாயிகள் நிம்மதி

செங்கையில் 19 நிரந்தர நெல் கொள்முதல் நிலையம்... மகிழ்ச்சி!:3 இடத்திற்கு நிதி ஒதுக்கியதால் விவசாயிகள் நிம்மதி

செங்கையில் 19 நிரந்தர நெல் கொள்முதல் நிலையம்... மகிழ்ச்சி!:3 இடத்திற்கு நிதி ஒதுக்கியதால் விவசாயிகள் நிம்மதி


ADDED : ஜன 01, 2025 08:45 PM

Google News

ADDED : ஜன 01, 2025 08:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 19 இடங்களில் நிரந்தர அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மூன்று இடங்களில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், நெல் கொள்முதல் நிலையம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செங்கல்பட்டு, வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாவிற்கு உட்பட பகுதிகளில், விவசாயம் செய்யப்படுகிறது.

இப்பகுதிகளில் பாலாற்றில் ஆழ்துளை கிணறு, கிணற்று நீர் மற்றும் ஏரி நீர் வாயிலாக சம்பா பருவம், நவரை பருவம், சொர்ணவாரி பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

மாவட்டத்தில், ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், வண்டலுார், தாம்பரம், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாவில், விவசாய நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் எல்.எண்டத்துார், செண்டிவாக்கம், தொன்னாடு ஆகிய கிராமங்களில், நிரந்தர அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சொந்த கட்டடங்கள் உள்ளன.

சம்பா, நவரை சொர்ணவாரி ஆகிய பருவங்களில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாவில், நெல் சாகுபடி அதிகமாக நடக்கிறது. மற்ற தாலுகாவில், குறைவாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

அறுவடை செய்யப்பட்ட நெல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு, நெல் விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.

ஆனால், திறந்தவெளியில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இதனால், விற்பனைக்கு கொண்டுவரும் நெல் மூட்டைகள் மற்றும் நெல்லை குவித்து வைக்கும் போது திடீரென மழை பெய்தால், நெல் நனைந்து உரிய விலை கிடைக்காமல், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து, நெல் மூட்டைகள் இருப்பு வைக்க, கிடங்கு அமைக்க வேண்டும் என, அரசிடம் தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மாவட்ட விவசாய நலன் காக்கும் கூட்டத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் கிடங்குகள் அமைத்து தர வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.

அதன் பின் மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் ஆகிய தாலுகாவில், 19 கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள் அமைக்க, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், வருவாய்த் துறைக்கு கருத்துரு அனுப்பினர்.

அதன் பின், 19 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்த வருவாய்த் துறையினர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு கருத்துரு அனுப்பினர்.

இதையடுத்து, இந்த இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, நிலம் மாற்றம் செய்து தருமாறு, வருவாய்த்துறைக்கு, வாணிப கழக அதிகாரிகள் கருத்துரு அனுப்பி உள்ளனர். இதில் பெரியகயப்பாக்கம், லத்துார், நெல்லி ஆகிய மூன்று இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் கட்ட, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், தலா 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், விரைவில் பணிகள் துவக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மற்ற இடங்களில், நிலம் மாற்றம் செய்யப்பட்டதும் பணிகள் துவங்கும் எனவும் தெரிவித்து உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், திறந்தவெளியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்கிறோம். மழை பெய்யும் போது, நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகின்றன. இதனால் உரிய விலை கிடைக்காமல், விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது. நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க, கிடங்குகளை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

-கே.குமார்,

மதுராந்தகம்,

நெல் கொள்முதல் நிலையம் அமையும் இடங்கள்


தாலுகா கிராமம்
மதுராந்தகம் ஒரத்தி, கொங்கரைமாம்பட்டு, வெள்ளப்புத்துார், பள்ளியகரம், நெல்லி, பூதுார், சிறுநல்லுார், வில்வராயநல்லுார், நல்லாமூர், ஓணம்பாக்கம்.
செய்யூர் தாலுகா பெரியகயப்பாக்கம், நீலமங்கலம், லத்துார், போரூர்
திருப்போரூர் ஒரகடம், சிறுகுன்றம், ரெட்டிக்குப்பம், ராயல்பட்டு, கீழுர்








      Dinamalar
      Follow us